MARY MAGDALENE ( TAMIL )
Availability:
Dimension (L x W x H):
Weight:
2
19.00 x 14.00 x 0.30 cm
250.00 gram
Have a question?
Have a question?
Have a question?
Have a question?
THE UNIQUE STORY OF MARY MAGDALENE BASED ON SCRIPTURE AND TRADITION. HER LOVE FOR JESUS WAS PURE LIKE THE PERFUME SHE HOLDS, AND IT WAS TO HER THAT JESUS FIRST APPEARED AMONG THE DISCIPLES AFTER RESURRECTION.
இந்நூல் அன்பு இயேசுவின் ஆருயிர் மகதலா மரியாவின் ஆழ்ந்த அன்பினையும், பற்றுதலையும் வெளிப்படுத்துகின்றது. ஆசிரியர் அந்த அன்பினை அனுபவித்து எழுதியுள்ளார். பவுலின் அருட்சகோதரிகள் இந்நூலை ஆக்கித்தர பொறுப் பேற்றுக் கொண்டது இறையின் திருஉளம். ஆயிரம், பல்லாயிரம் நூல்கள் அச்சிட்டு, அரங்கேற்றி 'பவுலைன் பதிப்பகம்' இந்நூலை பெருமையுடன் வெளியிடுகிறது. உலையிலிட்ட பொன்னாய் எழுத்துக்களுக்கு ஏற்றமளித் திருக்கிறது. அருமையான அருட் பணியாளர்கள், ஆன்மீகச் செழுமை பெற்றவர்கள் அறிவுசால் நுட்பமும், ஆவியின் நிறைவும், ஒருங்கே பெற்றவர்கள் அணிந்துரையும், வாழ்த்துரையும் வழங்கியிருப்பது இந்நூலுக்கு சிறப்பு. அருட் சகோதரியின் வாழ்த்துக்கள் இந்நூலைப் பற்றிய முழுத் தெளிவையும், படிப்பதற்கான ஆவலையும் தூண்டும் விதத்தில் சிறப்பாய் உள்ளது. கத்தோலிக்க திரு அவைக்கு அதன் மணிமுடியில் இது சிறிய மாணிக்க கல். ஒளி வீசட்டும். படிப்போர் இந்நூலை மற்றவர்க்கும் பகிர்க. பொக்கிஷமாய் பேணுக. வாழ்த்துக்கள்.
ஆசிரியர் திருமதி. ஆ. எலிசபெத் ராணி எம்.ஏ. (பொருளாதாரம்) பி.எட் பட்டதாரி. அரசு பணிபுரிபவர். இது இவரது இரண்டாவது புத்தகம். கருமண்டபம், திருச்சி குணமளிக்கும் ஆலய பங்குப்பேரவை உறுப்பினர், மறைக்கல்வி ஆசிரியர், அன்பிய பொறுப்பாளர், பாடகற்குழுவில் உறுப்பினர், பங்கின் இறை பணியிலும், சமூகப்பணியிலும் ஆர்வம் உள்ளவர். எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்.
© 2021, Copyright Pauline Sisters Bombay Society. All Rights Reserved. | designed by newleaftechnology.com






Reviews (0)